இளம் குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்

English

நடத்தை அறிகுறிகள்

  1. ஓரளவு வளர்ந்த குழந்தை ,சிறு குழந்தை போல நடந்துகொள்வது ( படுக்கையில் சிறுநீர் கழித்தல், விரல் சூப்புவது,அதிகப்படியாக அழுவது).
  2. அந்தரங்க உறுப்புகளுக்கு புதிய பெயர் சொல்வது.
  3. தேவையான சமயத்திலும் ஆடையை கழற்ற மறுப்பது ( உம்: குளிக்க,படுக்க,கழிவறை செல்ல, உள்ளாடை மாற்ற)
  4. மற்ற குழந்தைகளை பாலியல் நடவடிக்கையிலோ அல்லது விளையாட்டிலோ ஈடுபட அழைப்பது.
  5. பொம்மைகளிடம் ,பெரியவர்களின் பாலியல் நடவடிக்கை போன்றே செய்து விளையாடுவது.
  6. தன்னை அறியாது திடீரென சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் சில அறிகுறிகள் இங்கே. வளர்இளம் பருவத்தினர் வெளிப்படுத்தும் குறிப்பிட்ட அறிகுறிகள் இங்கே.

உங்களால் சிலசமயம் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்துபவரை அடையாளம் காண முடியும். பாலியல் அத்துமீறல் செய்பவர் வெளிப்படுத்த கூடிய அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே.

பாதிக்கப்படும் பெரியவர்களிடம் சில சமயம் காணப்படும் அறிகுறிகள் பற்றி படிக்க இங்கே.

நீங்கள் யாருக்காவது பாலியல் வன்முறை நடைபெறுவதாகச் சந்தேகப்பட்டால், தயவுசெய்து, மௌனமாக இருக்காமல் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். நீங்கள் எப்படி உதவ முடியும் என்பது குறித்த சில தகவல்கள் இங்கே