பணிபுரியுமிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலின தொந்தரவுகள்

English

பணிபுரியுமிடத்தில் நடக்கும் பாலின தொல்லைகள் இல்லாமலிருப்பதற்கு இந்த சட்டம் 2013ம் ஆண்டு ஏற்றப்பட்டது. இந்த சட்டம் பெண்கள் பணிபுரியுமிடத்தில் சந்திக்கும் தொல்லைகள் / வீட்டில் பணிபுரியும் பெண்கள் படும் துன்பங்கள் / அவமானங்கள் மற்றம் அனைத்து பெண்களுக்கும் வயது வித்தியாசமில்லாமல் பெண் சமூகத்தை பாதுகாப்பாக இருப்பதற்கு இச்சட்டம் ஏற்றப்பட்டது. இந்த சட்டத்தில் பாலின தொல்லைகள் குறித்த விளக்கம் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

 1. பணிபுரியுமிடத்தில் பெண்களை தொட்டு தொட்டு பேசுவது, அதை தொடர்ந்து அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவது
 2. உடல் சுகத்திற்காக உரிமையோடு கோரிக்கை வைத்து (அ) கெஞ்சி சம்மதிக்க வைப்பது
 3. புனிதம் இல்லாத வார்த்தைகளால் / காமம் கலந்த வார்த்தைகளால் உடல் உறவை விமர்சிப்பது
 4. ஆபாச படங்களை பார்க்க செய்வது
 5. ஆபாச வார்த்தைகளை பேசியோ (அ) அது போன்றோ தொட்டுக்கொண்டே ஆசையை தூண்டுவது

பெண்களுக்கு பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பாலின தொந்தரவு இந்த தொந்தரவுகளை கொண்டிருக்கலாம்

 1. தவறான வாக்குறுதிகளை கொடுத்து / சலுவைகளை வழங்கி மனமாற்றத்தை ஏற்படுத்தி சம்மதிக்க வைப்பது
 2. பணி குறித்த பயத்தை ஏற்படுத்தி எதிர்கால கனவுகளை கலைத்து நிலைகுலைய வைத்து சம்மதிக்க வைப்பது
 3. பணிபுரியும்போது அதில் தலையிட்டு குற்றம் காண்பித்து பணி செய்யுமிடத்தை சுமூகமான குழலில்லாமல் தவிக்க வைப்பது
 4. மன அழுத்தத்தை கொடுத்து அவர்களது ஆரோக்கியத்தை கெடுத்து பணி பாதுகாப்பில்லாமல் செய்வது

இந்த சட்டம் ஊழியர்களின் குறைகளை முறையிடுவதற்கு ஒரு உள் முறையீட்டு அமைப்பை நிர்வாகத்திற்குள் உருவாக்க வலியுறுத்துகிறது. அந்த அமைப்பில் பாதிக்கு மேல் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இது தவிர நிர்வாகம் தவிர்த்து வேறு ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு மாவட்ட அதிகாரியால் செய்யப்பட வேண்டும். அந்தமைப்பு பொதுவாக வரும் புகார்களை விசாரிக்கும் மற்றம் நிர்வாக தலைமைக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்தும் விசாரிக்கும். (அதே போல் வீடுகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலின தொல்லை ஏற்பட்டால் அதையும் இந்த அமைப்பு கவனிக்கும்.)

 1. பாதிக்கப்பட்ட பெண், அவருக்கேற்பட்ட தொல்லைகள் சங்கடங்களை சம்பவம் நடந்த நாளிலிருந்து 3 மாதத்திற்குள் புகாராக நிர்வாக அமைப்பிடமோ (அ) பொதுநல அமைப்பிடமோ கொடுக்க வேண்டும். ஒருவேளை அந்தப்பெண் மாற்று திறனாளியோகவோ / மனநலம் குன்றியோ இருந்தால் அவர் சார்பாக அவரது பாதுகாவலர் அந்த புகாரை தரலாம்
 2. இந்த அமைப்புகள் புகாரின் அடிப்படையில் 3 மாதம் வரை விடுப்பு தர முடியும் (அ) குற்றம் செய்தவருக்கு அபராதம் விதிக்கலாம். இந்த அமைப்பு பாதிக்கப்பட்ட இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தவும் முடியும்.
 3. இந்த அமைப்பு இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு அதில் முடிவெடுத்து சம்பந்தப்பட்ட தலைமைக்கு அனுப்பி வைக்க முடியும்
 4. பாலின குற்றம் நிரூபணம் ஆகிவிட்டால் குற்றம் நிகழ்த்தியவருக்கு சம்பள பிடித்தமோ பதவி இடைநீக்கமோ (அ) அபராதமோ விதிப்பதற்கு அதிகாரமுண்டு. நடைமுறையில் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு விதமான விதிகளை உருவக்கி பின்பற்றி வருகிறது. அதேசமயம், அமைப்புகள் கொடுத்த முடிவை நிர்வாகம் 60 நாட்களுக்குள் நடைமுறைபடுத்த வேண்டும்.
 5. பாலின பலாத்காரம் பணிபுரியுமிடத்தில் நடப்பதை இத்துடன் இணைத்து பலாத்காரமாக பார்க்கப்படுவதையும் சேர்த்திருக்கிறார்கள். மற்றும் பாதிக்கப்பட்டவர் எந்தவகையிலிருந்தாலும் அவருக்கு காவல்நிலையத்தில் புகாரளிக்க முழு தகுதியுடையவராவார். இந்த சட்டத்தின் நோகக்மே, பணிபுரியுமிடம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் இருக்கவேண்டுமென்பது தான். இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தாலும் மற்ற எல்லா இடங்களிலும் சாதாரணமாக நடப்பது / நிகழ்வது – பிடித்தவர், பிடிக்காதவர் என்று தரம் பிரித்து பணிபுரிவதால் அதற்கு கொடுக்கும் சலுகைகளினால் பணி செய்யுமிடம் பாதிக்கப்பட்டவருக்கு சில நேரங்களில் நரகமாகவே தோன்றும். அப்படிப்பட்ட குற்ற செயல்களுக்கு தண்டனை உண்டு என்றாலும் அது உடனடியாக கிடைக்காது. நீதிமன்றம் நீதி வழங்க காலதாமதமாகும்.
 6. பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிர்வாகத்தின் முடிவு சரியில்லாதபட்சத்தில் நேரத்தில் நீதி வேண்டி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள பாலியல் தொந்தரலிற்கு எதிரான சட்டங்களை தயவு செய்து படிக்கவும். இந்திய சட்டப்படி பாலியல் தொந்தரவிற்கான வரையறையும் நீங்கள் காணலாம்.

இங்கே பாலியல் தொந்தரவு பற்றி புகார் தெரிவிக்கம்போது மனதில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகளையும் பாதிக்கப்பட்டவருக்குரிய மருத்துவ உதவிகள் பற்றியும் அறியலாம்.