பாலியல் ரீதியாக பெண்களை தொந்தரவு செய்தவற்கு எதிரான தண்டனை சட்டம்

English

 1. பிரிவு 354

  • பிரிவு 354Aன்படி ஒரு ஆண்மகன் அடியில் சொல்லப்பட்டிருக்கும் பாலின சம்பந்தமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதி அதற்கு 3 வருட கடுங்காவல் சிறை தண்டனையோடு அபராதமும் விதிப்பதற்கு வரிவகை செய்யப்பட்டிருக்கிறது.

   1. ஒப்புதலில்லாமல் பலாத்காரமாக உடல்ரீதியாக தொடர்புகொள்ள முயற்சி செய்வது
   2. அதிகாரத்தோடு கூடிய உத்தரவு மற்றும் உரிமையோடு ஒரு கோரிக்கையை திணித்து தன்னுடைய வேட்கையை தணிப்பது
   3. ஆபாச புகைப்படங்களை வலுக்கட்டாயமாக பார்க்க வைப்பது / காண்பிப்பது

   ஆபாச வார்த்தைகள் நிறைந்த உரையாடலை நிகழ்த்துவது கூட தண்டனைக்கரிய குற்றமாகும் அதற்கு குறைந்தது 1 வருட சிறை தண்டனையோடு கூடிய அபராதமும் விதிக்க முடியும்.

  • பிரிவு 354Bன்படி பொது இடங்களில் வைத்து ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்துவதோ, அதற்கு துணைபோவதோ, துணையோடு செய்வதோ பிரிவு 354Bன் படி குற்றமாகும். அதற்கு 3 வருடத்திலிருந்து 7 வருடம் வரை தண்டனை கொடுக்க முடியும். மற்றும் அபராதமும் விதிக்க முடியும்.
  • பிரிவு 354Cன்படி திருட்டுத்தனமாக, அந்தரங்கமாக பெண்கள் ஆடை அணிவதையோ (அ) ஆடை மாற்றுவதையோ கண்காணித்து படமெடுப்பதோ, காணொளி செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். அந்த குற்றவாளிக்கு முதல் முறையாக இருந்தால் குறைந்தது 1 வருடம் சிறை தண்டனை கொடுப்பதற்கு அதுவே பிழைப்பாக இருக்கும்பட்சத்தில் 3 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும். தண்டனை வழங்கும்போது இந்த குற்றம் முதல்தடவையா அல்லது தொடர்குற்றமாக என்பதை தீர்மானித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

   இந்த பிரிவில் மேலும் சம்பந்தப்பட்ட பெண் அந்த நிகழ்ச்சிகளை படமெடுக்க, காணொளி செய்ய அனுமதி தந்தபோதும் அதை யாரோடும் பகிர்ந்துகொள்ள / பார்க்க அனுமதிக்காதபோது அவரது சம்மதம் இல்லாமல் அந்த செயல் நடந்தால் அதுவும் இந்த குற்றத்தில் சோர்க்கப்பட்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. அதேபோல், தொழில்நுட்பத்தை வைத்து அடுத்தவரின் சம்மதத்தோடு நடப்பது போல் ஒன்றின் இடத்தில் மற்றொன்றை மாற்றி வைத்து செய்யும் செயலும் இந்த குற்றத்தில் அடங்கும்.

  • பிரிவு 354D வலுக்கட்டாயமாக தேவையில்லாமல் ஒரு பெண்ணை பின்தொடர்வதோ, அதேபோல் Through the Cyber Space செய்தாலும் குற்றமாளும். இந்த குற்றம் முதல் தடவையாக இருந்தால் 3 வருட சிறைதண்டனையும், இதுவே தொடர் குற்றமாக இருந்தால் 5 வருடம் வரை சிறை தண்டனையும் அதோடு அபராதமும் விதிக்கப்படும்.

 2. பிரிவு 509: இந்த பிரிவில் எல்லை மீறிய பாலின தொந்தரவு பெண்ணிற்கு கொடுத்தால் அதுவும் இக்குற்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி அரங்கேற்றிய பாலின தொல்லைக்க அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
 3. இந்த தருணத்தில் பாலின தொந்தரவு / பலாத்காரம் / காயம்பட்ட ஆண்களுக்கு (அ) திருநங்கைகளுக்கோ எதுவும் தனிப்பட்ட முறையில் சட்டம் ஏதும் இல்லாத போதும் இது குறித்து இந்திய எல்லையை தாண்டி ஒரு வாக்குவாதமே நடந்து வருகிறது.

நாட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எப்படிப்பட்ட செய்கைகள் குற்றமாக கருதப்படவேண்டுமென்பதை பாலின தொந்தரவு சட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதை தயவுசெய்து படிக்கவும்.

இங்கே வழக்கு தொடர்வதற்கு முன்பாக பாதிக்கப்பட்டவருக்கு எப்படிப்பட்ட மருத்துவ உதவிகள் செய்யப்பட்டதென்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேல் நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.