மனதில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்

English

 1. பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:
  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.
 2. அனேகமாக அனைத்து காவல்நிலையங்களும் குற்றவாளிக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு இல்லாமலும் செயல்படுவதை கண்கூடாக காண முடிகிறது. அவர்கள் குற்றங்களை பதிவு செய்வதற்கு கூட ஒத்துழைப்பு தருவதில்லை. இது குற்றமாக இருந்தபோதிலும் முடிந்தவரை அதை தவிர்க்கவே நினைக்கிறார்கள். ஆனால் திருத்தப்பட்ட தண்டனை சட்டம் பிரிவு 166 தெளிவாக வலியுறுத்துகின்றது. எந்தவொரு காவல் அதிகாரியும் தன்னுடைய பணியில் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு பிரிவு 354, 354A-B, பிரிவு 509 (மற்றும் மகளிர் பாதுகாப்பு சட்டங்கள் உட்பட) பயன்படுத்தி அவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.
 3. இருந்தாலும் காவல் அதிகாரியின் மீது 166 பிரிவு பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அதிகார தொனியில் செயல்பட்டால் காரியம் நடக்காது. அதனால் இந்த நேரங்களில் சமூக நல அமைப்புகளோடு சென்று இப்படிப்பட்ட வழக்குகளை பதிவு செய்ய வைப்பது பாதுகாப்பானது. காவல் அதிகாரிக்கு நன்கு தெரியும், தம்முடைய வாதத்தை எப்போதும் NGOs ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று நட்சத்திரா என்ற சமூக அமைப்பு ஒரு கட்டுப்பாடு கொண்ட அமைப்பு. இந்த அமைப்பு தனது சேவையை இலவசமாக செய்து வருகிறது. இந்த திருத்தப்பட்ட தண்டனை சட்டம் பாதிக்கப்பட்டவரிடமிருந்து பெறப்படும் வழக்கின் விபரங்கள் மூலம் பாதிக்கப்பட்டவரை நண்பரரக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.
 4. ஒரு வழக்கு வந்து அதை பதிவு செய்யும் காவல் அதிகாரி அடையாளங்களையும் / தடயங்களையும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவர்களது பொறுப்பு. அது இந்த சட்டத்தில் கட்டாயமாக்கப்படுகிறது.
 5. மருத்துவ அறிக்கை மற்றும் காவல்துறையில் தரும் அறிக்கையின் நகலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 6. சட்ட விதி 1987ன்படி (அட்டவனை IV பிரிவு 12) உங்களுக்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்க வேண்டும்.
 7. மருத்துவர் அல்லது அது சம்பந்தப்பட்டவர் உங்களுக்கு ஆலோசனை அல்லது அறிவுரை வழங்க வேண்டுமென்ற உத்தரவிட்டால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. பலாத்காரத்தால் ஏற்படும் மனச்சிதைவு அல்லது பயம் அல்லது நடுக்கம் தவிர்க்கப்பட மனமாறுதலடைய அது வழிவகுக்கும். அலட்சியமாக கருதக்கூடாது. நட்சத்திர சமூக சேவை இதை இலவசமாக செய்கிறது. இதனால் அந்த கொடூர செயல் மறக்கவும் /எளிதாக எடுத்துக்கொள்ளவும் வழி வகுக்கிறது. பாதிக்கப்பட்ட ஆணோ அல்லது பெண்ணோ வருந்தும்போது செய்யவேண்டியவை இங்கே.
 8. எந்த காவல் நிலையத்திற்கும் மகளிரை இரவில் கைது செய்து அடைத்து வைக்க சட்டத்தில் இடமில்லை.

இந்திய சட்டப்படி பாலியல் தொந்தரவின் வரையறை, பாலியல் தொந்தரவிற்கு எதிரான சட்டங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான இந்தியாவில் உள்ள பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை தயவுசெய்து படிக்கவும்.