இந்திய தண்டனை சட்டத்தில் பாலியல் தொந்தரவின் வரையறை

English

சட்டத்தில் சில முக்கியமான பாலினக்குற்றம் எது என்பதை அங்கீகரித்து அதை உருவகப்படுத்தி இருக்கிறது.

  • சம்மதம் இல்லாமல் பாலின தொந்தரவை, உடல்ரீதியான பரிசத்தை கொடுக்க முற்படுவது.
  • உடல் சுகத்திற்காக கெஞ்சுவது அல்லது கட்டாயப்படுத்துவது.
  • ஆபாசமான கருத்துகளை கூறுவது
  • ஆபாசமான படங்களை வற்புறுத்தி காணச்செய்வது.
  • அந்தரங்க படுக்கை அறை காட்சிகளை காணொளி காட்சியாக எடுத்து சம்மதம் பெறாமல் அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வது.
  • வளர்ச்சி பெற்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி அடுத்தவரின் முகத்தை மட்டுமோ அல்லது கவர்ச்சி நிறைந்த பாகங்களையோ எடுத்து ஒரு முழு தோற்றத்தை வக்கிர புத்தியோடு உருவாக்கி நிழற்படமாகவோ அல்லது காணொளியாகவோ வெளியில் பகிரங்கப்படுத்துவது.
  • அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் ரகசிய நிகழ்வுகளை மறைந்திருந்து வேவு பார்த்து அந்தரங்கத்தை வெளிக்கொணர்வது.
  • பெண்களை நிர்வாணப்படுத்த முயற்சி மேற்கொள்வது.
  • பெண்களை தேவையில்லாமல் பின்தொடர்வது.

பெண்களை பாதுகாப்பதற்கு இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்களையும் மற்றும் பணிபுரியும் இடத்தில் உள்ள பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டங்களையும் தயவுசெய்து படிக்கவும்.

இங்கே பாலின பலாத்காரம் அல்லது அது தொடர்பான குற்றங்கள் குறித்து வழக்கு தொடர முயற்சிக்கும்போது பாதிக்கப்பட்டவர் மருத்துவ உதவி பெறும்போதும் மனதில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்.