பாலியல் தாக்குதலை பற்றி புகார் கொடுக்கும் முறை:

English

  1. பாதிக்க பட்ட நபர் ஏதேனும் காவல் நிலையத்தில் சென்று FIR பதிவு செய்ய வேண்டும் .
  2. அதன் பின்,  போலீஸார் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்பார். மருத்துவ  மனைக்கு நீங்களே நேரடியாகவும் சென்று மருத்துவ வசதி பெற்று கொள்ளலாம். 2000 SC உச்சநீதிமன்றத்தின் ஒரு விதியின் படி (கர்நாடக மாநிலம் v. மஞ்சன்ன), FIR பதிவு செய்யாதபோதிலும், பாலியல் தாக்குதலுக்கு ஆளான ஒரு பென்னிக்கோ அல்லது குழந்தையக்கோ நாட்டில் உள்ள எந்த மருத்துவ மனையும் மருத்துவ உதவி செய்ய மறுக்க கூடாது. சிலநேரங்களில், FIR பதிவு செய்த பின் மருத்துவ உதவிக்கு போகும் பொது ஆதாரங்கள் இழப்பு ஏற்படலாம். பாலினம் தாக்குதலிக்கான மருத்துவ பரிசோதனைகளை குறித்துள்ள விதிகளை படித்த்து கொள்ளவும். மருத்துவ பரிசோதனைகளை செய்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவ பயிற்சியாளர் மருத்துவ அறிக்கையை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  3. போலீஸ் உங்களிடம் உங்களின் சட்ட உரிமைகளின் விவரங்களை தெரிவிக்கவேண்டும். உங்கள் வழக்கை இலவசமாக வாதாட சட்ட உதவியை பெற்று கொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது.
  4. போலீஸாரிடம் ஆலோசகர்களின் விவரங்கள் இருக்க வேண்டும்.

இந்திய சட்டத்தின் படி பாலியல் தாக்குதலை குறித்துள்ள வரையறை மற்றும் இந்தியாவில் உள்ள பாலியல் தாக்குதலுக்கு எதிரான சட்டங்களை குறித்துள்ள விவரங்களை படித்துக்கொள்ளவும். பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்க்கு கொடுக்கப்படவேண்டிய மருத்துவ உதவிகளை குறித்த விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளவும்.

பாதிக்கப்பட்ட நபருக்கு சட்டம் மற்றும் மீட்பு செயல்முறைகளை குறித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்பிகள் இதோ.