பாலியல் தாக்குதலுக்கு எதிரான சட்டங்கள்:

English

பாலியல் பலாத்காரத்திக்கான தண்டனைகள் 376, 376A-E பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளன.

 1. பிரிவு 376 பற்றி இங்கு படிக்கவும். இங்கு பாலியல் தாக்குதலுக்கான தண்டனைகள் விவரிக்கப்பட்டுள்ளன. சிலது மோசமான வன்முறை என கருதப்படுகிறது, அவைகளின் தண்டனை கடுமையானது.
 2. பிரிவு 376 A இன் படி, ஒரு மோசமான தாக்குதலால் காயம் ஏற்பட்டு அதனால் அந்த பெண்ணின் மரணம் ஏற்பட்டாலோ, அல்லது உணர்வற்ற நிலை ஏற்பட்டாலோ, க்குற்றம் புரிந்தவருக்கு குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறை தண்டனை வழங்க படும். நீதிபதி நினைத்தால் இதை மிக வலுவான தண்டனை, அல்லது மரணதண்டனையாக கூட மாற்றப்பட முடியும்.
 3. 376B (ஜாமினில் பெற கூடிய): பாதிக்கப்பட்டவர் குற்றவாளியின் மனைவி என்றால் மற்றும் குற்றம் புரியும் பொழுது அவர்கள் தனித்தனியே வாழ்ந்திருந்தால், குற்றவாளிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க படும்.
 4. பிரிவு 376 C, ஒரு அதிகாரி பாலியல் வன்முறை செய்வதை பற்றி விவரிக்கிறது. ஆக்கிரமிப்பாளர் ஒரு:
  • அதிகார நிலையில் அல்லது நம்பிக்கைக்கு பத்திரமான உறவில் இருந்தால்;
  • ஒரு அரசு ஊழியராக இருந்தால்;
  • ஒரு சிறையின் கண்காணிப்பாளர் அல்லது மேலாளர்; சிறை அல்லது காவலின் மற்ற இடங்களிலோ, அல்லது பெண்கள் மாற்று குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரிந்தால்;
  • ஒரு மருத்துவமனையில் மேலாண்மை அல்லது ஒரு மருத்துவமனையில் ஊழியர் ஆக இருந்தால்,

  அவரது காவலில் அல்லது அவரது தலைமையின் கீழ் உள்ள ஒரு பெண்ணை தூண்டிவிடவோ அல்லது தவறான வழியில் செல்ல தூண்டவோ, அல்லது உடலுறவு வைத்துக்கொள்ளவோ செய்தால், பின்பு அந்த பெண்ணின் சம்மதத்துடன் இருந்தாலும், அந்த ஆளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்களுடன் கடுமையான தண்டனை கிடைக்கும்.

 5. பிரிவு 376 D கூட்டு கற்பழிப்பைப்பற்றியது. கூட்டு கற்பழிப்பை ஒரு கொடூரமான குற்றமாக கருதி அதில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரும் கொடுமையான குற்றவாளியாக கருதப்படுகிறார்கள். இதற்கான தண்டனை குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாகும்.
 6. பிரிவு 376 E தொடர் குற்றவாளிகளின் தண்டனை பற்றி. பிரிவு 376, 376A அல்லது 376D இன் கீழ் தொடர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டும்.
 7. கற்பழிப்பு முயற்சிக்கான தண்டனை: இ பி சி பிரிவு 511 இன் கீழ், கற்பழிக்க முயர்ப்பவருக்கு, கற்பழித்தால் கொடுக்கப்படும் அதிகப்பட்ச தண்டனையின் ஒரு பாதி தண்டனையாக கொடுக்கப்படும்.

* இது பாலியல் தாக்குதலுக்கு எதிரான மிகவும் வலுவான நிலைப்பாடு என்பதால், தவறான அறிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வேண்டும். சட்டப்படி தவறான அறிக்கைக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். எனினும், இது உண்மையான புகார் கொடுப்பதிலிருந்து பெண்கள் பின்வாங்குவதற்கு அல்ல, புகார் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பாளர் நிரபராதி என நிரூபிக்கும் வரை அவர் குற்றவாளி எனவே கருதப்படுகிறது.

இந்திய சட்டத்தின் பாலியல் தாக்குதல் வரையறை மற்றும் பாலியல் தாக்குதல் வழக்கை போலீசில் எப்படி புகார் கொடுப்பது என்பதை பற்றி படிக்கவும்.

பாலியல் தாக்குதலால் பாதிக்க பட்டவருக்கு கிடைக்க கூடிய மருத்துவ உதவிகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபருக்கு சட்டம் மற்றும் மீட்பு செயல்முறைகளை குறித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்பிகள் இதோ.