மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

English

 1. பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:
  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.
 2. அறிக்கை தாக்கல் செய்ய செல்லும் பொழுது, பல சந்தர்ப்பங்களில் போலீஸ் பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தந்துண்டு. பல முறை போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய திட்டவட்டமாக மறுத்ததும் உண்டு. இதுவும் ஒரு குற்றம் தான். இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் திருத்தப்பட்ட பிரிவு 166 இன் படி ஒரு போலீஸ் அதிகாரி 354, 354A-பி, 509 உள்ள பிரிவுகளில் (பெண்கள் உரிமைகள் தொடர்பாக ஏனைய பிரிவினர் மத்தியில்) வழக்கு பதிவு செய்ய மறுத்தால் அவருக்கு குறைந்தது 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் மற்றும் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார் .
 3. அதை நீங்கள் வேலை நடப்பதற்காக, 166 பிரிவு தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரியை அச்சுறுத்தும் ஒரு நல்ல யோசனை அல்ல. அது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து செயல் படுவது எப்பொழுதும் நல்லது. தொண்டுநிறுவனங்கள் போலீஸின் வார்த்தைகளுக்கு உடன்போக மாட்டார்கள் என்ன போலீஸ்க்கு தெரியும். Nakshatra அப்படி ஒரு தொண்டு நிறுவனம் தான். நிச்சயமாக, நீங்கள் தொண்டு நிறுவனங்களின் சான்றுகளை பற்றி கவனமாக இருக்க வேண்டும் – முதலாவதாக இந்த வரிசையில் பணிபுரியும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் இலவசமாக சேவைகளை வழங்கும்.
 4. அனைத்து பொலிஸ் தகவல்கள் மற்றும் மருத்துவ ரிப்போர்ட்டுகளின் ஒரு பிரதியை (ஜெராக்ஸ்) உங்களிடம் வைத்துக்கொள்ளவும்.
 5. சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டம் 1987 (பாடம் IV, பிரிவு 12) கீழ் நீங்கள் இலவச சட்ட சேவைகளுக்கு தகுதி பெற்றவர்.
 6. குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் கோட் சில விதிகளை சேர்க்க திருத்தம் செய்யப்பட்டன.
  • குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் திருத்தங்கள் வழக்கை பதிவு செய்யும் முறையை இன்னும் எளிதாக்கவும் மற்றும் தோழமையாக்கவும் முயற்சிக்கிறது. வழக்கு பதிவு செய்யும் போது ஒரு பெண் போலீஸ் அதிகாரி முன்னிலையில், ஆதாரங்கள், மருத்துவ நிலையங்களுக்குச் செல்ல போக்குவரத்து, போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
  • பாதிக்கப்பட்ட நபரின் நடத்தை அல்லது யாருடனோ உள்ள முன்னைய பாலியல் அனுபவங்கள் முற்றிலும் பொருத்தமற்றது (பிரிவு 53a, இந்திய சாட்சி சட்டம்).
  • ஒரு வேளை மோசமான பாலியல் தாக்குதலில் (இங்கு விவரித்தார்) உடலுறவு நடந்தது என்று நிருபிக்கப்பட்டால், மற்றும் பாதிக்கப்பட்டவர் அனுமதி தரவில்லை என்று நீதிமன்றத்தில் கூறினால், பின்னர் அது அனுமதியில்லை என்று கருதப்படும் (பிரிவு 114A, இந்திய சாட்சி சட்டம்). மேலும் இந்திய சாட்சி சட்டம் பிரிவு 146 ல், ஒப்புதல் கேள்வி ஒரு பிரச்சினையாக இருக்கையில், பாதிக்கப்பட்ட நபரின் நடத்தையை பற்றி எந்த ஆதாரமோ அல்லது குறுக்கு விசாரணையோ செய்ய கூடாது, மற்றும் அவரது முன்னைய பாலியல் அனுபவங்களை அல்லது, கற்பழிப்பின் பொது அல்லது கற்பழிப்பு முயற்சியின் பொது, அவர் தன்னுடைய எதிர்ப்பை எப்படி தெரிவித்தார் என்று விசாரிக்க கூடாது.
 7. எந்த பெண்ணையும் இரவு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட கூடாது.
 8. ஒரு மருத்துவர் அல்லது அத்தகைய பரிந்துரைத்ததன்படி ஆலோசனை கொடுக்க சொன்னால், தயவு செய்யது அதை புறக்கணிக்க வேண்டாம். பாலியல் வன்முறை மனரீதியாக உங்களால் கற்பனை கூட செய்யமுடியாத அளவில் பாதிக்கலாம். இது பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக உண்மை. அதிலினர்ந்து குணமடைவது ஒரு கடினமான யுத்தம், ஆகையால் ஒரு தொழில்முறை ஆலோசகர் உதவியுடன் செய்ய வேண்டும். Nakshatra பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்குகிறது. பாதிக்கப்பட்டவன் அல்லது பாதிக்கப்பட்டவன் மிக தாழ்மையாக செந்திக்கும் பொழுது செய்ய கூடிய சில விஷயங்கள் இதோ.

இந்திய சட்டத்தின் படி , பாலியல் தாக்குதலின் வரையறை குறித்து, பாலியல் தாக்குதலுக்கு எதிரே ஆன சட்டங்களை பற்றி மற்றும் பொலிஸாரிடம் பாலியல் தாக்குதலை குறித்து புகார் கொடுக்கும் முறை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி கொடுப்பதை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.