இந்தியா பேனல் கோடின் படி கற்பழிப்பின் வரையறை:

English

இந்திய குற்றவியல் பிரிவு 375 படி, ஒரு மனிதன் கற்பழிப்பை சேய்தவனாக கூறப்படுவது எப்பவென்றால்:

 1. அவன் தனது ஆண்குறியை ஒரு பெண்ணின் யோனி, வாய், வடிகுழாய் அல்லது ஆசனவாயில் ஊடுருவிப்பது அல்லது அந்த பெண்ணை அவனோடோ அல்லது வேறு யாருடோனோ அவ்வாறு செய்ய தூண்டினால்
 2. ஏதேனும் பொருளோ அல்லது ஆண்குறி அல்லாத உடம்பின் வேறு ஏதாவது அங்கங்களையோ ஒரு பெண்ணின் யோனி, வடிகுழாய் அல்லது ஆசனவாய்க்குள் நுழைப்பதோ அல்லது அவ்வாறு அவணுடனோ அல்லது வேறு யாருடனோ அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்துவது
 3. ஒரு பெண்ணின் உடம்பின் ஏதேனும் அங்கங்களை தூண்டுவிப்பதின் மூலம் அவளின் யோனி, வடிகுழாய், ஆசனவாய் அல்லது வேறு ஏதேனும் அங்கங்களில் ஊடுருவிக்கவோ அல்லது அவ்வாறு வேறு யாருடினேயோ செய்ய வலியுறுத்தல்
 4. தனது வாயை ஒரு பெண்ணின் யோனி, ஆசனவாய், வடிவிக்குழாயில் வைப்பது அல்லது அவளை அவனுடனோ மற்று யாருடனோ அவ்வாறு செய்ய வைப்பது,

  கீழ்காணும் ஏழு விளக்கங்களில் அடங்கக்கூடிய எதேனும் சூழ்நிலைகளில்:

  • தனது நோக்கத்திற்கு எதிராக
  • தனது சம்மதம் இல்லாமல்
  • தனது சம்மத்தோடு, ஆனால் அவளுக்கோ அல்லது  அவளுடைய வேண்டவர்களுக்கோ  மரணம் அல்லது ஆபத்து நிகழும்  என  பயம் மூலம்  பெற்ற சம்மதம்
  • அவளது  சம்மதுடன், ஆனால் அவன் தன கணவன் என்று நம்பி.  மேலும் அவனுக்கு தான் அவளது கணவர் இல்லை என்று தெரிந்தும். அதேபோல், அவளை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை கொடுத்து ஆவலுடன் உடலுறவு கொள்வது
  • அவளது சம்மதுடன், ஆனால் அந்த சம்மதம் தான் மயக்கத்திலோ அல்லது போதையிலோ இருக்கும் போது தான் சம்மதம் கொடுப்பதின் விளைவுகளை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில்
  • 18 வயதிற்கு  கீழ் உள்ள பெண்ணின் சம்மதத்துடனோ இல்லாமலோ,
  • தன் சம்மதத்தை தெரிவிக்க முடியாத சூழ்நிலை
 5. தன் மனைவியே ஆனாலும், 15 வயதிற்கு கீழுள்ள அந்த பெண்ணிடம் உடலுறவு அல்லது பாலியல் செய்கைகளை செய்வது.

சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் சம்மதம் சந்தேகத்திற்கு இடமில்லாத தன்னார்வ  ஒப்பந்தம் ஆகும். அதாவது, ஒரு பெண்ண, குறிப்பிட்ட செயலுக்காக தன்  விருப்பத்தை வார்தைகளாலோ, சைகைகளாலோ  அல்லது வாய்மொழியாகவோ இல்லாமலோ தெரிவித்திருக்க வேண்டும். எனினும் சட்டம் குறிப்பாக கூருவது என்னவென்றால் ஒரு பெண்  உடல் ரீதியாக ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது மட்டுமே அவளின் சம்மதமாக கணக்கில் எடுத்துக்கொள்ள படாது.

இந்தியாவில் உள்ள பாலியல் தாக்குதலுக்கு எதிரான சட்டங்களை குறித்துள்ள விவரங்களை படித்துக்கொள்ளவும். பாலியல் தாக்குதலை குறித்து வழக்கு அறிக்கைபொலிஸாரிடம் கொடுப்பதின் முறைகள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர்க்கு கொடுக்கப்படவேண்டிய மருத்துவ உதவிகளை குறித்த விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளவும்.

பாதிக்கப்பட்ட நபருக்கு சட்டம் மற்றும் மீட்பு செயல்முறைகளை குறித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்பிகள் இதோ.