இந்திய பீனல் கோடு 376 ஆம் பிரிவு

English

376 ஆம் பிரிவின் படி:

 1. பாலியல் தாக்குதல் குற்றம் புரிபவருக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
 2. மோசமான தாக்குதல் வழக்குகளில் சிறப்பு விதிகள் உள்ளன
  • குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் நிலைய எல்லைக்குள் நியமனம் செய்த ஒரு போலீஸ் அதிகாரி என்றால், அல்லது ஏதேனும் நிலைய வீட்டின் வளாகத்தில்; அல்லது அவரது காவலில் உள்ள ஒரு பெண் மீது குற்றம் செய்தால், அல்லது அவரது கீழ் வேலை சேயும் அதிகாரியின் காவலில் இருந்தால்
  • குற்றம் சாட்டப்பட்டவர் ர் ஒரு பொதுத் துறை பணியாளர் என்றால், அவரது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பயன்படுத்தி தனது காவலில் ஒரு பெண்ணை கற்பழித்தால்
  • குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சிறை ஊழியர் அல்லது சிறை நிருவாகத்தில் உள்ளவர் என்றாலோ, அல்லது காவல் துறையின் மற்ற இடங்களில் பணிபுரிபவர் என்றாலோ, அல்லது பெண்கள்/குழந்தைகள் நிறுவனத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி கற்பழித்தல்
  • குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மருத்துவமனை ஊழியர் அல்லது மருத்துவமனை நிறுவகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி அங்கு வேலை செய்யும் பெண்ணை கற்பழித்தல்
  • பாதிக்க பட்ட நபர் கர்பிணி என்றால்
  • பாதிக்க பட்ட நபர் 12 வயதுக்கு கீழ் இருந்தால்
  • குற்றம் சாட்டப்பட்டவர் கூட்ட கற்பழிப்பு செய்த கூட்டத்தை சேர்ந்தவராயிருந்தால்

  பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் குறைந்தது பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்க படும். ஒரு பெண்ணை கூட்ட பாலியல் பலாத்காரம் செய்திருந்தால், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு வரும் ஒரு மோசமான தாக்குதல் செய்ததாகக் கருதப்படும்.