திருமண கற்பழிப்புகளுக்கு எதிரான குடிமையியல் சட்டம்

English

  1. பாதிக்கப்பட்ட பெண் புகார் பதிவு செய்து இருந்தாலும் அவரை வீட்டை விட்டு பெளியேறுமாறு சொல்வதற்கு எந்த சட்டத்திலும் இடம் இல்லை என்பது முதலும் முக்கியமானதுமாகும். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் உங்கள் கணவர் மீது புகார் செய்து இருந்தால், அவர் உங்களை வீட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்த முடியாது.
  2. வீட்டு வன்முறை நடந்து இருந்தாலோ அல்லது உடனடியாக நடக்க உள்ளது என உணர்ந்தாலோ எந்த ஒரு நபரும் புகாரை பதிவு செய்யலாம். நல்ல நம்பிக்கையுடன் புகார் தெரிவிக்க குடிமை அல்லது குற்ற பின்னணி இல்லாத நபராக இருந்தல் வேண்டும்.
  3. இது குடிமை சட்டமாகும் மற்றும் குடிமை நீதிமன்றத்தில் விசாரிக்க பட வேண்டும்.
  4. இந்த புகார் கொடுக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள்ளாக முதலாவது விசாரணைனை நீதிபதி மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அலுவலர் அறிவிக்க வேண்டுமென இந்த சட்டம் சொல்கிறது.
  5. விசாரணக்காக நீங்கள் வழக்கறிஞரை பெறுவதற்கும் பாதுகாப்பு அலுவலர் உங்களுக்ஊ உதவி செய்ய வேண்டும். சட்ட பணிகள் ஆணைய விதி 1987 (அத்தியாயம் IV, பிரிவு 12) ன் படி நீங்கள் இலவச சட்ட பணிகளை பெறுவதற்கு தகுதியானவர்.
  6. பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா அல்லது அபராதம் விதிக்கப்பட வேண்டுமா என்பதை நீதிபதி முடிவு செய்வார். சில நேரங்களில் தனிப்பட்ட அல்லது குடும்ப ஆலோசனைக்கு உத்தரவிடப்படும் . இந்த உத்தரவை நடைமுறை படுத்துவது பாதுகாப்பு அலுவலரின் பொறுப்பு ஆகும்.
  7. இந்த ஆணையின் விதிமீறல் இருப்பின், விதி மீறுவோர் குற்ற சட்டப்படி குற்றம் சுமத்தப்பட்டு அவர் மேல் குற்ற நடவடிக்கைகள் தொடங்கப்படும். இது ஓரரண்டு சிறை தண்டனை மற்றும் /அல்லது ரூபாய் 20,000/- வரையிலான அபராத்திற்கோ வழி வகுக்கும். மேலும் இந்த பாதுகாப்பு அலுவலர் தனது கடமையை செய்யாவிடில் அவர் குற்றச் சட்டப்படி விசாரிக்கப்பட்டு சிறையில் கூட அடைக்கப்படுவர்.
  8. இந்த வழக்கின் முதல் விசாரணை நாளிலிருந்து 60 நாட்களுள்ளாக இந்த வழக்கை நீதிபதி முடிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. நீதிபதி ஆலோசனைக்கு உத்தரவிடும் பட்சத்தில் மேலும் 2 மாதங்கள் வரை தாமதமாகலாம்.

* வீட்டு வன்முறைக்கு எதிரான வலுவான நிலைப்பாடு என்பதால் தவறான புகார்களில் இருந்த பாதுகாக்க வழிமுறைகள் இருக்க வேண்டும். தவறான புகார் அளித்தால் சிறை தண்டனையோ அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சரியான புகார் அளிப்பதிலிருந்து இந்த சட்டம் பெண்களை தடுப்பதில்லை. மேலும் இந்த குற்றத்தை நிருபிக்கப்படாத வரை குற்றம் சாட்டப்பட்டவர் குட்றவாளியாக கருதப்படமாட்டார்.

இந்திய சட்டப்படி குடும்ப பாலியல் வன்முறையின் வரையறை, எவ்வாறு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிப்பது மற்றும் சட்ட மற்றும் மீட்புச் செலவின் போது பாதிக்கப்பட்டவர் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய அறிய அந்த அந்த இணைப்புகளில் தயவு செய்து படித்து அறியவும்.