நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள்

English

 1. பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:
  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.
 2. சிகிச்சை தேவைப்படும் எனில், தயவு செய்து அனைத்து மருத்துவ அறிக்கை மற்றும் ரசீதுகளையும் பத்திரமாக வைத்து கொள்ளவும்.
 3. வீட்டு வன்முறைகளை தடுப்பதற்கு ஆலோசனைகள் சிறந்த வழிமுறை என்று கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் எனில் அதற்கு பின்னர் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை பெற ஆலோசனைகள் உங்களுக்கு உதவும். நீதிபதியால் உத்தரவு பிறப்பித்து உங்கள் பாதுகாப்பு அலுவலர் அல்லது நீங்கள் ஆலோசனை பெறும் மருத்துவர் அறிவுறுத்திருக்கும் பொழுது ஆலோசனை நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிடாதீர்கள். பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவருக்கு நட்சத்திரம் (Nakshatra) இலவச ஆலோசனைகளை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களை பற்றி தாழ்வாக நினைக்கும்போது அவர்களுக்கான சில குறிப்புகள் இங்கே.
 4. விசாரணையின் முடிவில் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவின் நகலை பத்திரமாக வைத்திருக்கவும்.
 5. எந்த பெண்மணியையும் காவல்நிலையத்தில் இரவு நோத்தில் கண்டிப்பாக கைது செய்து வைத்திருக்கக்கூடாது.

இந்திய சட்டப்படி வீட்டு பாலியல் முறைகேட்டின் வரையறை பற்றி அறியவும், வீட்டு பாலியல் முறைகேட்டிற்கு எதிரான சட்டங்களை அறியவும் மற்றும் காவல் நிலையத்துக்கு எவ்வாறு புகார் தெரிவிக்க வேண்டும் என்பதை அறியவும் தயவு செய்து அந்த இணைப்புகளில் படித்தறியவும்.