சட்டவிரோத ஆள் கடத்தலை எவ்வாறு அறிவிப்பது

English

 1. வழக்கமாக காணாமல் போன நபரை பற்றிய புகாரை காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்கு நீங்கள் சந்தேதிக்கும் நபர்தான் கடத்தியுள்ளார் என்று வெளிப்படையாகச் சொல்லலாம். இதில், காவல் துறையின் சட்டவிரோத ஆள் கடத்தலுக்கு எதிரான பிரிவை தொடர்புகெள்ள வேண்டும். இல்லை எனில் கடத்தப்பட்ட அல்லது காணாமல் போன நபர் கடத்தலுக்கு உள்ளவார் என்று காவலர் கருதலாம். (காவல் துறையினர் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கையை எழுத வேண்டும் அல்லது அவர்கள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 166ன் படி சிறைத் தண்டணைக்குட்படுத்தப்படுவார்).
 2. மேலும், இந்த துறையில் வழக்கமாகச் செயல்படும் அரசு சாரா அமைப்புகளின் உதவியும் இந்த செயலை துரிதப்படுத்தும். காவல்துறை மிகவும் பலம் கொண்ட அதிக தூரம் அடையக் கூடிய ஒரு பிணையத்தை வெளிப்படையாகக் கொண்டிருக்கும். இருந்தபோதிலும், பல நிகழ்வுகளில், அவர்கள் புகார் எழுதுவதில் மற்றும் விரைவாக புலனாய்வு நடத்துவதில் தீவிரமாக இருக்கமாட்டார்கள். ஒரு நபர் காணாமல் போன முதல் சில நாட்கள், அந்த நபரை கண்டறிய மிகவும் முக்கியமானதால், வேகமான புலனாய்வு மிகவும் அவசியமானதாகும்.
 3. தயவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகலை பத்திரமாக வைத்திருக்கவும். நீங்கள் இதை சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக செயல்படும் பல அமைப்புகளுக்கு எடுத்துச் சென்றால், அவர்கள் காவல்துறை காணாமல் போன நபரின் வழக்கில் விரைந்து செய்பட வற்புறுத்தலுக்கு உதவி செய்வார்கள்.
 4. பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட அனைவரும் சட்டப்பணிகள் ஆணைய விதி 1987 (அத்தியாயம் IV, பிரிவு 12)ன் படி இலவச சட்ட உதவிக்கு தகுதியானவர்கள்.
 5. கடத்தலில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்காக, அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன. இந்த இடங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், தொழில் பயிற்சி வழங்குதல் அல்லது கல்விக்கு உதவி மற்றும சமூகத்தில் இணைவதற்கான மற்ற பல செயல்களை செய்வதற்கு பொருப்பானவர்கள். சட்டவிரோத ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் ஓர் அரசு சாரா அமைப்பு நட்சத்திரம்.
 6. ஆள் கடத்தலின் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆலோசனை மிகவும் முக்கியமானதாகும். அவர்களில் பலர் கொடுமைகள் மற்றும் அதிர்ச்சிகளின் உச்சகட்ட காலத்திற்கே சென்றிருக்கக்கூடும். பலர் குழந்தைகளாக இருக்கக் கூடும். பலர் தங்கள் சுயமரியாதையை இழந்திருப்பார்கள். மற்றும் பலர் தாங்கள் வாழ்வதை தடுக்க விரும்புவார்கள். அவர்கள் அடிக்கடி அந்த அதிர்ச்சியின் நினைவால் தினசரி வாழ்க்கையில் சிரமப்படுவார்கள். அவர்களின் வாழ்வில் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தவும் மீண்டும் வாழவும், ஆலோசனை அவர்களுக்கு உதவி செய்யும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலத்திற்கு மிகவும் முக்கியமாக செய்ய வேண்டியதாகும். பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்சத்திரம் இலவச ஆலோசனைகளை வழங்குகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பற்றி தாழ்வாக உணரும்பொழுதும் அவர்களுக்கான சில குறிப்புகள் இங்கே .
 7. பிப்ரவரி 2014ல் இந்திய அரசு ஆள் கடத்தலுக்கு எதிரான இணையதளத்தை (http://stophumantrafficking-mha.nic.in/default.aspx) வெளியிட்டு அதன் மூலம் இதில் ஆர்வமுள்ளவர்கள் இந்த தாலைப்புகள் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ள சிறந்த வழி என்று நம்புகிறார்கள்.
 8. நீங்கள், ஒரு நபரோ அல்லது குழந்தையோ கடத்தப்படுகிறார்கள் என்றறிந்தால் உடனே, காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு ரயில் அல்லது பேருந்து நிலையததில், ஏதாவது நபர் கடத்தப்படுவதாக சந்தேகித்தால், உடனே காவல் துறைக்கு சொல்லவும். வழக்கமாக காவல்துறையினர் ரயில் அல்லது பேருந்து நிலையத்தில் இருப்பார்கள். நீங்கள் காவல் துறையின் உதவி எண்களை அழைத்தும். அந்த சம்பவம் நடந்த இடத்தையோ அல்லது போக்குவரத்து இடத்தையோ எங்கு நீங்கள் பார்த்தீர்கள் என்பதை தெரிவிக்கலாம்.
  • ஆள் கடத்தலுக்கு எதிரான செயலுக்கு : 09884326993
  • பெண்களின் உதவிக்கு: 1091
  • குழந்தைகளின் உதவிக்கு: 1098
  • பிணைத் தொழிலாளர்களின் உதவிக்கு: 805 608 0000
  • காவல் : 100
  • மத்திய புலானாய்வுத் துறை (24 x 7) ஆள் கடத்தலுக்கு எதிரான உதவிக்கு: 011 2436 8638.

நீங்கள் இங்கு ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டங்களை படித்தறியலாம்.