சட்ட விரோத ஆள் கடத்தலுக்கு எதிரான விதிகள்

English

  1. இந்திய தண்டனைச் சட்டம் 366ன் படி – ஆள் கடத்தல், ஒரு பெண்ணை திருமணத்திற்கு அல்லது ஒருவன் பாலியல் உடலுறவிற்கு கட்டாயப்படுத்துதல் ஒரு தண்டிக்கத்தக்க 10 ஆண்டுகள் வரை சிறைதண்னை வழங்க் கூடிய அல்லது அபராதத்தடுன் கூடிய குற்றமாகும். இது அதிகாரத்தை வரம்பு மீறி செயல்படுபவர்களுக்கு அல்லது குற்றசெயலை செய்ய மிரட்டுபவர்களுக்கு பொருந்தும்.
  2. பிரிவு 366A – பெண் குழந்தையை ஒரு நபருடன் முறையற்ற உடலுறவுக்கு தூண்டும் படியான இடங்களுக்கு அனுப்புவதும் அபராதத்துடன் குடிய 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும்.
  3. பிரிவு 336 B – 21 வயதிற்கு குறைவான பெண்ணை தவறான பாலியல் உடலுறவிற்கு உட்படுத்தும் நோக்கத்தோடு இறக்குமதி செய்வதும் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும்.
  4. பிரிவு 370 : ஒரு நபரை அடிமையாக உட்படுத்துதல் அல்லது வாங்குதல்: ஒரு நபரை அடிமையாக ஏற்றுமதி , இறக்குமதி, த வாங்குதல் உட்படுத்தல், ஒத்துக்கொள்ளுதல், பெற்றுக்கொள்ளுதல் அல்லது அந்த நபரின் விருப்பத்திற்கு எதிராக பிடித்து வைத்தல் அபராதத்தடுன் கூடிய 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும்.
  5. பிரிவு 370A : ஒரு வயது வராத நபரை தெரிந்தோ அல்லது நமபத்தகுந்த காரணத்துடனோ ஏதாவது வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்து, 5 ஆண்டுகளுக்கும் குறையாத , 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத் தண்டனை வழங்கக் கூடிய மற்றும் அபராதத்ததுடன் கூடிய குற்றமாகும்.
  6. பிரிவு 372 : ஒரு வயது வராத நபரை தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ விபச்சாரத்திற்காக விற்பதுவும், அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் வரை சிறைத தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும்.
  7. பிரிவு 373 : ஒரு வயது வராத நபரை தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ விபச்சாரத்திற்காக வாங்குவதும், அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும்.
  8. ஒழுக்கங்கெட்ட கடத்தலுக்கு எதிரான சட்டத்தைப் பற்றி படிக்கவும் : இந்த சட்டம் விபசார செயல்களை நடத்தும் நபர்களை தண்டிக்கும் விதிகளை வழங்குகின்றது.

ஆள் கடத்தல் பற்றிய செயல்களை அறிவிப்பதற்கு இங்கு பல தகவல்கள்.