ஒழுங்கங்கெட்ட கடத்தலுக்கு எதிரான சட்டம்

English


இந்த சட்டத்தின் சில முக்கிய அம்சங்களாவது:

  1. விபச்சார விடுதி நடத்தும் நபர், விபச்சாரத்திற்காக பெண்களை வாங்கும் நபர் அல்லது விபச்சாரத்திற்கு பெண்களை தூண்டும் ஒருவர், விபச்சாரத்திற்காக பெண்களை வாங்க முயற்சிக்கும் நபர் அல்லது விபச்சார சேவையை பயன்படுத்துபவர் ஆகிய அனைவரும் பல்வேறுஅளவிலான சிறைத்தண்டனை மற்றும் /அல்லது அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்கள். கடத்தல் குற்றத்திற்கு துணைபோகும் நபர் குற்றத்தை செய்தவராகவே கருதப்படுவார்.
  2. விபச்சார வளாகத்தில் ஒரு குழந்தை காணப்பட்டால் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை கண்டறியப்பட்டால், அது வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரை, குழந்தை விபச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று கருதப்படும். இதற்கு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
  3. விபச்சார விடுதியில் காணப்படும் எந்த நபரும், அவர் விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது இல்லை என்றாலோ, சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படுவார்.
  4. விபச்சார விடுதி நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு பெண் கண்டறியப்பட்டால், அவர் சிறைக்கு பதிலாக விளக்கமறியும் இல்லத்தில் வைக்கப்படுவார்.
  5. விபச்சார விடுதி சோதனையின்போது காணப்படும், தவறாக பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும், மருத்துவ உதவி வழங்கப்படும் மற்றும் ஓழுக்கக் கேடான கடத்தல் வழக்குகளை நடத்தும் நீதிபதியிடம் மருத்துவ அறிக்கை கொடுக்கப்படும்.
  6. சோதனையின்போது விபச்சார விடுதியில் காணப்படும் ஒவ்வொரு நபரும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விபச்சாரத்தில் அந்த நபரின் பங்குஎன்ன என்பதை மேலும் விசாரணை செய்யப்படும்.
  7. ஹோட்டல் போன்ற பொது இடத்தை சோதனையிட்டு, விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டால், ஹோட்டலின் அல்லது அந்த இடத்தின் உரிமம் குறைந்தது 3 மாதங்கள் ரத்து செய்யப்படலாம்.