குழந்தை பாலியல் வன்முறை பற்றி எப்படி புகார் செய்வது:

English

கடைபிடிக்க வேண்டிய முறைகள்:

  1. சம்பவத்தைக் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது சிறப்பு சீர்திருத்த காவல் நிலையத்திலோ புகார் செய்யலாம்.
  2. காவலர்கள், குழந்தையை அருகாமையில் உள்ள மருத்துவ மையத்தற்க்கு 24 மணி நேரத்திற்குள் அழைத்து செல்ல வேண்டும்.
  3. மருத்துவ பரிசோதனையின் போது கட்டாயமாக பெண் ஒருவர் உடன் இருக்க வேண்டும். மேலும், பெற்றோர் உடன் இல்லாமல் இருந்தால், பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரி 24 மணி நேரத்திற்குள், பெண் காவல் அதிகாரியையோ, உதவியாளரையோ வரவழைக்க வேண்டும்.
  4. மருத்துவ உதவிக்கு செல்வதற்க்கு முன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததால்; மருத்துவ உதவி செய்ய முடியாது என்று எந்த மருத்துவரும் பாதிக்கப்பட்டவரை திருப்பி அனுப்ப முடியாது. மருத்துவ உதவி மற்றும் பரிசோதனைகுறித்த தகவல்களை தயவுசெய்து சரிபார்த்துக் கொள்ளவும்.
  5. 24 மணிநேரத்திற்குள் குழந்தை நல குழுவிற்கும் (எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது.) காவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  6. 30 நாட்களுக்குள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். 1 வருடத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கு முடிக்கப்பட வேண்டும். துரித விசாரணைக்காகவே இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  7. உங்களுக்கு, கலந்தாய்வு நிபுணர்கள் பற்றிய விபரங்களை காவல்துறையினர் வழங்க வேண்டும்.

குழந்தை பாலியல் வன்முறைக்கு தேவையான மருத்துவ உதவி பற்றி தயவுசெய்து அறிந்து கொள்ளவும்.

குழந்தை பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் பற்றியும் படித்து அறிந்து கொள்க. சட்ட நடைமுறை, மருத்துவ சிகிச்சை போன்றவற்றின் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் சில.