குழந்தை பாலியல் முறைகேடு

English

குழந்தைகளைத் தவறாக அணுகுபவர்களுக்கு. விரைந்து தண்டனை வழங்க “பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012” வரையறுக்கப்பட்டது. இந்திய சட்டப்படி பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள எல்லோரும் குழந்தைகளாக கருதப்படுவர்.

பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:

  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.