குழந்தை பாலியல் முறைகேடுக்கு எதிரான சட்டங்கள்:

English

 1. உடலுள் ஊடுருவும் பாலியல் வன்கொடுமை:

  தண்டனை: குற்றவாளிக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டலாம்.

 2. உடல்ஊடுறுவல் இல்லாத பாலியல் வன்கொடுமை:

  பாலியல் நோக்கோடு ஒரு குழந்தையின் ஆண்குறி,பெண்குறி,ஆசனவாய் அல்லது மார்பை தொடுவதை குறிக்கும். சரியாகச் சொன்னால் பாலியல் நோக்குடன் குழந்தையின் எந்தவொரு உடல் பாகத்தை தொடுவதோ அல்லது தொடச் செய்வதோ அந்தக் குழந்தையை பாலியல் வன்முறை செய்வதாகும்.

  தண்டனை: குற்றம் செய்தவர் யாராயிருப்பினும் 3 வருட சிறைதண்டனை விதிக்கப்படும். அத்தண்டனை 5 வருடத்திற்க்கும் நீட்டிக்கப்படலாம்.

 3. மோசமான பாலியல் கொடுமை:

  சில நடவடிக்கைகளை சட்டம் மோசமான பாலியல் கொடுமையாக வரையறுக்கிறது.

  தண்டனை:

  • உடல்ஊடுறுவலுடன் மோசமான பாலியல் கொடுமை செய்தவருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படலாம்.
  • உடல் ஊடுறுவல் அற்ற மோசமான பாலியல் கொடுமை செய்தவருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

 4. பாலியல் துன்புறுத்தல்:

  குழந்தை கேட்கக் கூடியதாகவோ அல்லது பார்க்க க் கூடிய வகையிலோ பாலியல் எண்ணத்தோடு செய்யப்படும் சத்தமோ அல்லது செய்கையோ அல்லது உடல் உறுப்பை காட்சிப்படுத்துவதோ பாலியல் துன்புறுத்தல் ஆகும். மேலும் மற்றவர்கள் பரவக்கூடிய வகையில் குழந்தையை தனது உடல் உறுப்புகளைக் காண்பிக்கச் செய்வது அல்லது சைகைகள் செய்ய வைப்பதும் பாலியல் துன்புறுத்தல் ஆகும். குழந்தையை இடைவிடாது தொடர்ந்து நேரிலோ அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகவோ அல்லது வேறு வகையில் பார்ப்பதோ, பாலியல் நோக்கில் எந்த ஒரு பொருளை காட்டுவதோ, அல்லது ஆபாச பட நோக்கத்தில் குழந்தையை மயக்குவதோ குழந்தை பாலியல் முறைகேடாக எடுத்தக்கொள்ளப்படும்.

  தண்டனை: குழந்தையிடம் பாலியல் முறைகேடாக நடப்பவருக்கு 3 வருட சிறை தண்டனை தரப்படலாம்.

 5. குழந்தை ஆபாச படத்திற்க்கு எதிரான சட்டத்தைப் பார்க்கவும்.
 6. உடந்தை:

  குற்றம் செய்வதற்கு துணை போவதும், நடந்த குற்றத்தைப் பற்றிய உண்மை நிலவரத்தை மறைப்பதும் உடந்தையாக கருதப்படும்

  தண்டனை:குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவருக்கு அவரே குற்றம் செய்த்தாக கருதி தண்டனை வழங்கப்படும்.

 7. குற்றம் செய்ய முயற்சி:

  குற்றம் செய்ய முயல்பவருக்கு, குற்றம் செய்வதற்க்கான தண்டனையில் பாதியளவு சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 8. அறிந்து கொண்டு புகார் அளிக்காமல் இருத்தல்:

  குழந்தைக்கு பாலியல் வன்முறை நடப்பதை ஒருவர் அறிய வந்தாலோ அல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தாலோ அதை உடனடியாக காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அப்படி நல்எண்ணத்துடன் புகார் செய்பவர் குற்றவியல் மற்றும் குடிமையியல் பொறுப்பில்; பொய்புகார் செய்பவராக கருதப்படமாட்டார்.

  தண்டனை: குழந்தை வன்கொடுமை பற்றி அறிந்து இருந்தும் புகார் செய்ய தவறுபவருக்கு (குழந்தைகள் தவிர) 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஒரு அமைப்பு அல்லது நிறுவனப் பொறுப்பில் இருப்பவர்(குழந்தைகள் தவிர) தான் அறிந்த குழந்தை வன்கொடுமை பற்றிபுகார் செய்யாமல் இருந்தால் , அவருக்கு 1 வருட சிறை தண்டனை உடன் கூடிய அபராதம் விதிக்கப்படலாம்.

 9. புகாரை பதிவு செய்யாமல் இருத்தல்:

  எந்த ஒரு காவலர் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றிய புகாரை பதிவு செய்யவில்லை என்றாலும்; அவருக்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் பிரிவு 166ன் கீழ் குறைந்த பட்சம் 6 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 10. மருத்துவ உதவி அளிக்க மறுத்தல் :

  மருத்துவ மையத்தில் இருப்பவர் , மருத்துவ உதவி அளிக்க மறுத்தால், அவர் பிரிவு 166Bன் கீழ் சிறை தண்டனை அனுபவிக்கவோ அல்லது அபராதம் கட்டவோ நேரும்.

*இந்த சட்டம் சுரண்டப்படுபவர்களை பாதுகாப்பதாகும். எனவே,குற்றம் புரிந்தவர்களுக்கு மக கடுமையான தண்டனைகளைக் கொண்டது. அதன் விளைவாக, பொய் குற்றம் அல்லது பொய் தகவல் தருவதற்கும் மிக கடுமையான தண்டனை உண்டு. என்றாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கே; தன்னை நிரபராதி என நிரூபிக்கும் உரிமை வழங்கப்படுவதால், எந்தவகையிலும் இச்சட்டம் உண்மையான புகாரைத் தடுக்காது.

குழந்தை பாலியல் வன்முறைக்கு தேவையான மருத்துவ உதவி குறித்து தயவுசெய்து படிக்கவும்.

குழந்தை பாலியல் வன்முறை குறித்து புகார் செய்வது எப்படி என்பதையும் படிக்கலாம். சட்ட நடைமுறைகளின் போதும், மருத்துவ சிகிச்சையின் போதும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் சில.