குழந்தை பாலியல் வன்முறை பற்றி மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

English

 1. பின்வரும் புள்ளிகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:
  • நினைவு: ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் உங்கள் நினைவகத்தை பாதிக்கலாம். ஒரு பாதிக்கப்பட்டவர் நிகழ்ந்த சம்பவத்தை தயக்கத்துடன் நினைவுகூறலாம் அல்லது துல்லியமான நினைவுடன் ஆனால் துண்டு துண்டாக நடந்த நிகழ்வை நினைவில் கொண்டு இருக்கலாம்.
  • உணர்ச்சிகள்: அதிர்ச்சியின் எதிர்வினையாக பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பாராத உணர்ச்சிகரமான எதிர்வினைகளை அனுபவிக்கலாம். ஒரு சம்பவம் நினைவு கூறும்போது, அவர்கள் உணர்ச்சியில்லாமல் இருக்கலாம் அல்லது தீவிர உணர்ச்சி ஊசலாட்டத்தை அனுபவிக்கலாம்.
  • உடல்ரீதியான உணர்வு: அந்த அதிர்ச்சி ஒரு பாதிக்கப்பட்ட நபரில் தற்காலிக அசைவற்ற நிலையை ஏற்படுத்த கூடும், அது தீவிர பயத்தைத் தூண்டிவிடும் சூழ்நிலைகளில் உடலை உறைய செய்யும். இதை அனுபவிக்கும் ஒரு பாதிக்கப்பட்டவர்க்கு இதை எதிர்த்துப் போராடுவதோ அல்லது இதில் இருந்து விடுபடுவதோ சாத்தியம் இல்லை. இந்த நேரத்தில், அதிர்ச்சியை அனுபவிக்கும் ஒரு நபரால் தங்கள் தசை மறிவினையை கட்டுப்படுத்த முடியாது. சம்பவம் நடத்த போது எதிர்வினை புரியாமைக்கு குற்ற உணர்வு கொள்ளாதே.
 2. பாலியல் தாக்குதலைப் பற்றி புகார் செய்யும் போது, பல தருணங்களில் காவல்துறையினர் ஒத்துழைப்பது இல்லை. பல சமயங்களில் காவலர்கள் புகார் பதிவதை முற்றிலுமாக மறுக்கின்றனர். ஆனால், இது குற்றமாகும். இந்திய குற்றவியல் சட்டம் 166 ன் திருத்தத்தின் படி, அவ்வாறு; குற்றத்தை பதிவு செய்ய மறுக்கும் காவல் அதிகாரியை 6 மாத காலத்திற்கு சிறை வைப்பதுடன் அபராதமும் விதிக்கப்படலாம். எனவே, புகார் செய்யும் முயற்சியில் இருந்து பின்வாங்காதீர்கள்.
 3. பிரிவு 166 ன் படி , குற்றத்தை பதிவு செய்யக் கூறி காவல் அதிகாரியை மிரட்டுவதும் சரியான முறை இல்லை. எனவே, இது போன்ற புகார்களை வழக்கமாக கையாளும் அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினருடன் செல்வது நல்லது. ஏனெனில், காவல்துறையினருக்கு; இது போன்ற அரசுச சாரா அமைப்பைச் சார்ந்தவர்கள் , காவலர்களின் பேச்சுக்காக இது போன்ற விஷயங்களில் பின்வாங்க மாட்டார்கள் என்பது தெரியும். Nakshatra அது போன்ற ஒரு அரசு சாரா அமைப்பு ஆகும். ஆனாலும், நீங்கள் அவ்வாறான அமைப்புகளை தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் நற்சான்றுகளை கவனமாக ஆராய வேண்டும். எந்தவொரு நம்பகமான அரசு சாரா அமைப்புகளும் இது போன்ற சேவைகளை இலவசமாகவே செய்யும் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.
 4. நமது சமுதாயமும் ஏன் காவல்துறையினரும் கூட, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் புரிந்தவருக்கே திருமணம் செய்துவைக்கச் சொல்வார்கள். தயவுசெய்து, சிறார் திருமணத்திற்கு எதிரான இந்திய சட்டங்களை படியுங்கள். குற்றம் புரிந்தவர்க்கே ; பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து வைப்பது ,அந்தக் குற்றத்தை விட கொடுமையானது.
 5. பாதிக்கப்பட்ட குழந்தையை பாதுகாப்பாக உணர வைப்பதற்காக, சாட்சியங்களை சேகரிப்பதும், அறிக்கை எழுதுவதும் குழந்தை தேர்ந்தெடுக்கும் இடத்திலேயே நடக்க வேண்டும்.
 6. காவல் துறை புகார்கள், மருத்துவ அறிக்கை மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தயவுசெய்து பாதுகாப்பாக வைத்திருங்கள். இந்த அனைத்து நகல்களும் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
 7. சட்ட சேவை அதிகார 1987 சட்டத்தின் கீழ் (அத்தியாயம் VI,பிரிவு 12) இலவச சட்ட சேவை உங்களின் உரிமையாகும். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமும்;தாக்குதலுக்கு உள்ளானவருக்கு இலவசமாக மொழி பெயர்பாளர்,மருத்துவ உதவி மற்றும் கலந்தாய்வு நிபுணரையும் ஏற்பாடு செய்ய வகை செய்கிறது.
 8. சில சமயம் குற்றம் சாட்டப்பட்டவர், தான் மனநிலை பிறழ்ந்தவர் என வழக்காடலாம். சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டால் அன்றி; இந்த வகையில் பிரதிவாதி வாதம் செய்ய முடியாது என POSCO சட்டம் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.
 9. சாட்சிகள் சேகரிக்கப்படுவது முதல் விசாரணை வரை அனைத்து நடைமுறைகளும் குழந்தைகளுக்கு எளிதாகப் படவேண்டும். சாட்சிகளின் அறிக்கை ; குழந்தை புரிந்து கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும். விசாரணையின் போதும் குழந்தைக்குத் தேவையான இடைவெளி தரப்பட வேண்டும்.
 10. எந்த குழந்தையும் இரவில் காவல் நிலையத்தில் காவல் வைக்கப்படக் கூடாது.
 11. பாலியல் வன்முறையானது குழந்தைக்கு மிகவும் மோசமான அனுபவமாகும். இந்த வன்முறையின் பின் விளைவுகள் பல சமயங்களில் ; அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும் தொடரும். ஆண் அல்லது பெண்ணை பலப் பல வகைகளில் பாதிக்கும். ஆகையால், கலந்தாய்வு ஆலோசனைக்கு செல்வது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்த தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு மிகவும் அவசியமாகும். பாதிக்கப்பட்டவர் மீண்டு வரும் காலம் வரை கலந்தாய்வு ஆலோசனையை தொடர வேண்டும் என நாங்கள் அழுத்தமாக பரிந்துரைக்கிறோம். பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச கலந்தாய்வு ஆலோசனையை Nakshatra வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர் மன சோர்வுடன் இருக்கும் போது செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கே தருகிறோம்.

குழந்தை பாலியல் வன்முறையில் தேவையான மருத்துவ உதவி குறித்து தயவுசெய்து படிக்கவும்.

குழந்தை பாலியல் குறித்து புகார் அளிப்பது எப்படி என்றும் குழந்தை பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் குறித்தும் நீங்கள் படிக்கலாம்.