குழந்தை ஆபாச படத்திற்கு எதிரான சட்டங்கள்

English

  1. ஆபாச பட நோக்கில் ஒரு குழந்தையையோ அல்லது பல குழந்தைகளையோ பயன்படுத்துபவருக்கு 5 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். தொடர் குற்றங்களுக்கு 7வருடங்கள் வரை சிறை தண்டனையும் , சில சமயங்களில் அபராமும் விதிக்கப்படலாம்.
  2. ஆபாசபடத்திறக்காக குழந்தையை பயன்படுத்துபவர் அக் குழந்தையிடம் உடலுள் ஊடுருவும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு இருந்தால் அவருக்கு குறைந்த பட்சமாக 10 வருட சிறை தண்டனை விதிக்கப்படலாம். ஆனால் அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படலாம்.
  3. குழந்தையை ஆபாச படத்திற்காக பயன்படுத்துபவர், அக் குழந்தையிடம் மோசமான உடலுள் ஊடுருவும் பாலியல் வன்முறையை நடத்தியிருந்தால், அவருக்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
  4. குழந்தையை ஆபாசபட நோக்கில் பயன்படுத்துபவர் ஊடுருவல் அற்ற பாலியல் வன்முறையில் ஈடுபட்டு இருந்தால் , அவருக்கு 6 வருட கால குறைந்த பட்ச சிறை தண்டனை வழங்கப்படலாம். ஆனால், அது 8 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படலாம்.
  5. குழந்தை ஆபாசபட நோக்கில் பயன்படுத்துபவர் ஊடுருவல் அற்ற ஆனால் மோசமான பாலியல் வன்முறை நடத்தியிருந்தால், அவருக்கு குறைந்தபட்சம் 8 வருட சிறை தண்டனை வழங்கப்படலாம். மேலும் அது 10 வருடமாக நீட்டிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படலாம்.
  6. குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாச உள்ளடக்க பொருளை சேகப்பில் வைத்து இருப்பவருக்கு 3 வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.