மோசமான பாலியல் வன்முறை

English

கீழ்கண்ட சூழ்நிலைகள் மோசமான பாலியல் வன்முறையாக கருதப்படுகின்றன:

 1. குற்றம் புரிந்தவர்; இருக்கும் காவல் அதிகாரியாலோ
 2. ஆயுதப்படையில் பணியில் இருக்கும் போது அல்லது அவரின் ஆணைக்கு உட்பட்ட பகுதியில் அல்லது அவரை ஆயுத படை பிரிவில் இருப்பவர் என அறிந்த பகுதியில் ஒருவர் குற்றம் செய்திருந்தால்.
 3. குற்றம் அரசு ஊழியரால் செய்யப்பட்டிருந்தால்
 4. சிறை,பாதுகாப்பு இல்லம்,கண்காணிப்பு இல்லம் அல்லது வேறு ஏதாவது இடத்தில் குழந்தை பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் போது ; அந்த இடத்தின் நிர்வாகி அல்லது ஊழியர் குற்றத்தில் ஈடுபட்டால்
 5. மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவரோ அல்லது ஊழியரோ குற்றம் செய்திருந்தால்
 6. கல்வி நிறுவனம் அல்லது மதம் சார்ந்த நிறுவன நிர்வாகளில் ஒருவராலோ அல்லது ஊழியராலோ குற்றம் நடத்தப்பட்டிருப்பின்
 7. குற்றம் பலரால் கூட்டாக செய்யப்பட்டிருந்தால், ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் மோசமான பாலியல் வன்முறை செய்ததாகக் கருதப்படுவார்.
 8. கொடிய கருவி,நெருப்பு,சூடாக்கப்பட்ட பொருள் அல்லது அரிக்கும் தன்மை உடைய பொருளை பாலியல் வன்முறையின் போது குழந்தையின் மேல் பிரயோகித்து இருந்தால்
 9. பாலியல் தாக்குதலால் குழந்தைக்கு மிக மோசமான காயம் ஏற்ப்பட்டிருந்தால், குழந்தை தனது உடல் அல்லது மன திறனை இழந்திருந்தால்,அல்லது இந்த தாக்குதலால் குழந்தைக்கு எச் ஐ வி அல்லது வேறு உயிருக்கு அச்சுறுத்தல் தரும் தொற்று வந்திருந்தால்
 10. உடல் அல்லது மன நிலை பாதிக்கப்பட்ட குழந்தையிடம் குற்றம் நடத்தப்பட்டிருந்தால்
 11. பெண் குழந்தை இத்தாக்குதலால் கருவுற்றால்
 12. குழந்தையிடம் தொடர்ந்து குற்றம் நடத்தப்பட்டிருந்தால்
 13. குழந்தை 12 வயதிற்கு கீழ் இருந்தால்
 14. குற்றம் உறவினராலோ அல்லது குழந்தை வசிக்கும் இடத்தில் உடன் வசிப்பவராலோ நடத்தப்பட்டிருந்தால்
 15. குழந்தைக்கு சேவை செய்யும் அமைப்பின் உரிமையாளர் அல்லது நிர்வாகி அல்லது ஊழியர் குற்றத்தைச் செய்திருந்தால்
 16. குழந்தை இருக்கும் நிறுவனம், வீடு அல்லது வேறு இடத்தில் நம்பிக்கைக்கு அல்லது பொறுப்புக்கு உரியவரால் குற்றம் நடத்தப்பட்டு இருந்தால்
 17. குழந்தை கருவுற்று இருப்பது குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிந்து இருந்தால்
 18. பாலியல் குற்றத்திற்க்குப் பிறகு கொலை முயற்ச்சி நடந்திருப்பின்
 19. வகுப்புவாத அல்லது மதவாத இடையூறின் போது குற்றம் நடத்தப்பட்டிருப்பின்
 20. குற்றம் சாட்டப்பட்டவர் எந்த ஒரு பாலியல் வன்முறையிலாவது முன்பே ஈடுபட்டவராக இருந்தால்
 21. பாலியல் வன்முறைக்குப் பிறகு குழந்தையை நிர்வாணமாக்கி பொது மக்களிடையே நடமாடவிட்டால்