இந்தியாவில் குழந்தை திருமண பழக்கம்

English

2006 இல் குழந்தை திருமண தடை சட்டம் மிகவும் கடுமையான சட்ட விதிகளுடன் வரும் வரையில், இந்தியாவில் குழந்தை திருமண பழக்கம் மிகவும் அதிகரித்த வண்ணம் இருந்தது. பெண்ணின் திருமண வயது 18 மற்றும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் இந்தியாவில் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த வயது வரம்புக்கு குனறவாக உள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

குழந்தை திருமண தடை சட்டங்கள்
  1. 18 வயதிற்கு கீழ் உள்ள ஒரு பெண்ணை கட்டரயப்படுத்தி திருமணம் செய்தாலோ , அல்லது திருமணம் செய்து அவளை கடத்தி விற்க முற்பட்டாலோ கடுமையான தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும் அந்த திருமணம் செல்லாது என்னும் மாவட்ட நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த திருமணம் முலமாக இரு வீட்டாரும் மாற்றி கொண்ட வரதட்சனை பொருட்களை திரும்ப ஒப்படைக்க பட வேண்டும் என்றும் சட்டம் வகுக்கப்பட்டது.
  2. 18 வயதிற்கு மேல் உள்ள ஒரு ஆண் குழந்னத திருமணத்தில் ஈடுபட்டாலோ அல்லது எவ்விதத்திலிலாவது அதற்கு உடந்தையாக இருந்தாலோ , இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டணையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இவை பிணைவிடாக் குற்ற பிரிவில் வருபனவ.
  3. மாவட்ட நீதிவான் குழந்தை திருமணம் தொடர்பான துப்பை வைத்து ஒருவர் மீதோ அல்லது ஒரு அமைப்பின் மீகீதா தடை உத்தரவு பிறப்பிக்கலாம். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் இரண்டு வருட கடுங்காவல் தண்டனைக்கு உட்படுத்தபபடுவார்கள். சிறை தண்டனை பெண்களுக்கு விதிக்கபடுவதில்லை. அதற்கு பதிலாக அபராதம் விதிக்கப்படுகிறது. தடை உத்தரவை மீறியும் திருமணம் நனடபெற்றால் அது சட்டப்படி செல்லாது.
  4. ஒரு பெண்ணின் பாதுகாப்பு கருதி இந்திய அரசாங்கம் பல சட்டங்களை விதித்துள்ளது.ஒரு பெண்ணுக்கு 18 வயதிற்கு முன்பாக திருமணம் செய்யப்பட்டு, அவளுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பட்சத்தில் 18 வயது கடந்து இரண்டு வருடத்திற்குள் மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மாப்பிள்ளை வீட்டார் அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டும். அவனது அடுத்த திருமணம் வரையில் அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி நீதிமன்றமே சில சமையம் எங்கு தங்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கும்.
  5. குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையானவள் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யம்.
எப்படி புகானர பதிவு செய்வது
  1. ஒவ்வொரு மாவட்டமும் சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு குழந்தை திருமண தடை பிரிசை சேர்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். அவரது வேலை அந்த பகுதியில் குழந்தை திருமணம் ஏதேனும் நடைபெறுகிறதா என்று விசாரிப்பதும், நடைபெறாமல் பார்த்து கொள்வதும், அப்பகுதி மக்களுக்கு குழந்தை திருமண தடை சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான்.
  2. எந்த ஒரு தனி மனிதனும் குழந்தை திருமணம் கிதாடர்பான புகாரை காவல் நிலையத்திகீலா அல்லது அந்த பகுதியில் உள்ள சிறப்பு குழந்தை திருமண தடை பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட அதிகாரியிடமோ அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் மனுகீவா தாக்கல் செய்யலாம். அந்த புகார் ஒருவர் மீகீதா அல்லது குற்றத்திற்கு காரணமான அமைப்பின் மீதோ இருக்கலாம்.
  3. பெண்ணோ அல்லது ஆணோ குழந்தை திருமணம் செய்திருக்கும் பட்சத்தில் அந்த இருவரில் ஒருவர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். ‘இந்த திருமணத்தை செல்லாது என்று பிறப்பிக்க வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்யலாம். இதனை அவர்கள் குறைந்தபட்சம் 18 (பெண்) மற்றும் 21 (ஆண்) வயதாகி இரண்டு வருடத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.
  4. மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தை திமணத்தில் இருந்து விடுபட்டு வரும் பெண்ணுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது என்பது தொடர்பான மனுவையும் சமர்பிக்கலாம்.