கருகலைப்பிற்கான சட்டங்களும் வரைமுறைகளும்

English

மருத்துவ முறையில் கலைக்கப்படும் கர்பத்திற்கான இந்திய சட்டம் 1971ன் படியும்,அதைத் தொடர்ந்த திருத்தம் 2002ம் ஆண்டின் படியும் ; இந்தியாவில் கருகலைப்பு சட்டரீதியானது. இந்த சட்டம்,பாலியல் வன்முறையால் உருவாகும் கருவை கலைக்கலாம் என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

கரு 12 வாரங்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு பதிவுபெற்ற மருத்துவரின் பரிந்துரையின்படி கரு கலைப்பு செய்யலாம். கருவை 12 லிருந்து 20 வாரங்களுக்குள் கண்டறிந்தால் அதை கலைக்கும் முன் 2 பதிவுபெற்ற மருத்துவர்களின் ஆலோசனை பெறப்பட்ட வேண்டும்.

சமீபத்தில், 18 வயதுக்கு உட்பட்ட தாயின் உடல் நலத்தை 3 மூத்த மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு 24 வார கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இத்தீர்ப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், 2014ல் கருகலைப்பிற்கான காலவரையறையை நீட்டிப்பதற்க்கான சட்ட திருத்தத்திற்கு வரைவு எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் ஏற்ப்பட்டுள்ள தொழிற்நுட்ப வளர்சியால்,பெரும்பாலும் 20 வாரத்திற்க்கு மேற்பட்ட கருவைக் கூட; தாயின் உடல்நிலைக்கு எந்தவொரு அச்சுருத்தலும் இல்லாமல் கலைக்கலாம்.

முக்கியம்:

  1. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் ,அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் ஒப்புதல் கையெழுத்து தேவை.
  2. மற்றபடி, கருவை கலைக்க , சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் மட்டும் போதுமானது.