ஆசிட் தாக்குதல்களுக்கான சிகிச்சை

English

அமிலத்தால் பாதிக்கப்பட்டவருக்கான சிகிச்சை பல கட்டங்களாக செய்யப்படுகிறது. இது பல சிக்கலான நடைமுறைகள் கொண்ட ஒரு நீண்ட மற்றும் வலிமிக்க பயணம் ஆகும். இவ்வனைத்து நடைமுறைகளும் மருத்துவமனையின் கையில் இருக்கும். எனினும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் பின்வரும் விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  1. அனைத்து வழிகளிலும் தொற்று தவிர்க்கப்பட வேண்டும். எனவே பாதிக்கப்பட்டவரின் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறம் மிகவும் முக்கியமாகும். அறையை ஒவ்வொரு நாளும் கிருமிநாசினிகள் கொண்டு 2-3 முறைகள் சுத்தம் செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும். உணவு கொள்கலன்கள் தூய்மைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் உணவை வெளியில் இருந்து வாங்கி வரக் கூடாது.
  2. எரிந்த பகுதிகளை ஒழுங்கான முறையில் மூடி இருக்க வேண்டும். இரு எரிந்த பகுதிகள் ஒன்றுடன் ஒன்றுடன் ஓட்டி இருக்க கூடாது – இது நீண்ட கால ஊனத்தை ஏற்படுத்தக் கூடும்.
  3. ஒழுங்கான பிசியோதெரபி, உடல் பாகங்கள் அசையும் தன்மையுடன் இருப்பதையும் மற்றும் நரம்புகள் செயல்பாட்டுடன் இருப்பதையும் உறுதி செய்வதில் முக்கியமானதாகும்.
  4. பாதிக்கப்பட்டவரின் சேதமடைந்த திசுக்கள் குணமடைய உதவ உணவில் அதிக அளவு புரதங்கள் மற்றம் கார்போஹைட்ரேட்டுகள் வேண்டும், இரத்த சிவப்பணுக்களின் நிலை அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இருக்க உணவு உதவியாக இருக்க வேண்டும் – இல்லை எனில் அறுவை சிகிச்சைகள் நிகழ்த்த முடியாது. ஒருவேளை, மிக அதிக அளவு இரத்த இழப்பு ஏற்பட்டால் இரத்த ஏற்றம் தேவைப்படலாம்.
  5. வெளிப்பட்டுள்ள பகுதிகளை மூடுவதற்காக, தோல்-ஒட்டு செய்யப்பட வேண்டும். பொதுவாக இது, தீக்காயங்களால் பாதிக்கப்படாத, தொடை அல்லது முதுகு போன்ற உடல் பாகங்களில் இருந்து சிறிது தோல் எடுத்து செய்யப்படுகிறது.
  6. தீக்காயங்கள் குணமடைந்த பின்பு, சாத்தியமான நிலையை பொறுத்து, சுருங்கிய தோலை சரி செய்யவும், புருவங்கள், நாசி, காது துளைகள் போன்ற உடல் பாகங்களை சரி செய்ய திருத்தும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தேவைப்படும். முடிந்தால் பல திருத்தம் செய்யும் அறுவை சிகிச்சைகளை வரிசைப்படுத்தி, திட்டமிடுவதற்கான ஒரு நல்ல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை ஆலோசிக்கலாம்.

தயவு செய்து, அமில தாக்குதலுக்கு பின் செய்ய வேண்டிய உடனடி மருத்துவ உதவி பற்றி படிக்கவும். அமில தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ஆலோசனை மற்றும் சமூக மீள் ஒருங்கிணைப்பு உள்ளடக்கிய நீண்டகால சிகிச்சை பற்றியும் நீங்கள் படிக்கலாம்.

நிதி உதவி: ஆசிட் தாக்குதலில் இருந்து மீள்வது என்பது, பல அறுவை சிகிச்சைகள் மற்றும் நீண்ட கால சமூக மீள் ஒருங்கிணைப்பு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம். பல நேரங்களில், மீட்பு பணியானது உங்களால் செலவு செய்ய முடிந்ததை விட அதிக விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆசீட் சர்வைவர்ஸ் பெளண்டேஷன் இந்தியா மறறும் ஸ்டாப் ஆசிட் அட்டாக் ஆகிய இரண்டும் இந்தியாவில், அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் முன்னணி அமைப்புகள் ஆகும். இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் உதவ முயற்சி செய்கின்றன.

மேலும், அமில தாக்குதல்களுக்கு எதிரான சட்டங்கள் பற்றி மற்றும் அமில தாக்குதல் பற்றி போலீசாரிடம் எவ்வாறு புகாரளிப்பது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.