ஆசிட் தாக்குதல்கள் பற்றி எவ்வாறு அறிவிப்பது

English

  1. எந்த ஒரு ஆசிட் தாக்குதல் வழக்கையும், போலீஸ் நிலையத்தில் அறிவிக்கலாம். இந்திய குற்றவியல் சட்டம் 166ன் கீழ், அறிக்கையை எடுக்க மறுக்கும் எந்த ஒரு போலீஸ்காரரும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மற்றும் அபராதம் செலுத்தவும் வேண்டியதிருக்கும். நீங்கள் கிாிமினல் வழக்கை கையாள்வதற்காக, ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களை கையாளும் ஒரு அரசு சாரா அமைப்பின் (என்.ஜி.ஓ) உதவியை கேட்க முடியும்.
  2. நீங்கள், பாதிக்கப்பட்டவரை முதலில் மருத்துவமனைக்கும் கொண்டு சென்று சிகிச்சையை தொடங்க வேண்டும் மற்றும் அதன் பின்பு தான் எப். ஜ. ஆா் தாக்கல் செய்ய போக வேண்டும்.
  3. ‘லீகல் சா்வீஸஸ் அதாாிட்டீஸ் ஆக்ட் 1987’ (பாடம் IV, பிாிவு 12) மற்றும் ‘பொ்ஸன்ஸ் வித் டிஸ்ஸெபிலிட்டீஸ் ஆக்ட் (பாடம் I)ன் கீழ், பாதிக்கப்பட்ட அனைவரும் இலவச ஆலோசனை பெற தகுதி பெற்றவா்கள் ஆகும்.

இங்கு ஆசிட் தாக்குதல்களுக்கு எதிரான சட்டங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.

மேலும், ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உடனடி மருத்துவ உதவி , குறுகிய கால சிகிச்சை மற்றும் நீண்ட கால சிகிச்சை பற்றி நீங்கள் தொிந்து கொள்ள வேண்டும்.