நீண்ட கால மீட்பு

English

  1. பாதிக்கப்பட்ட வடுக்களுடன் கூடிய திசுக்கள் குணமடைவதற்காக, தோலை ஒழுங்காக பராமாிக்க வே்ணடும். இதை செய்வதற்கான இரண்டு வழிமுறைகள் யாதெனில – வழக்கமான எண்ணெய் மசாஜ் மற்றும் அழுத்த-வஸ்திரத்தை நாளொன்றுக்கு 10-12 மணி நேரம் அணிவது ஆகும்.
  2. ஆசிட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கவுன்சிலிங் மிகவும் முக்கியமானதாகும். ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் சுய அடையாளத்துக்காகவும், சுய மாியாதைக்காகவும், நீண்ட கால சிகிச்சை, வலி மற்றும் சமூக களங்கத்துக்கு எதிராகவும் போராட வேண்டி இருக்கும். எனினும் ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நோயால் வாழ்க்கையில் மீண்டும் எழுந்த பல நிகழ்வுகள் உள்ளன. இதுபோன்ற உதாரணங்கள், நோயாளிகளுக்கு நம்பிக்கையுடன் மீளவும் மற்றும் வாழ்க்னகயை எதிா்நோக்கவும் உதவுகிறது.
  3. சில சந்தா்ப்பங்களில் பாதிக்கப்பட்டவரை அவரது குடும்பமே கைவிட்டு, சமூக களங்கம் காரணமாக ஒதுக்கி வைத்து உள்ளது. சில நேரங்களில், விலை உயா்ந்த சிகிச்சை மற்றும் செலவுகள் காரணமாக, பாதிக்கப்பட்டவாின் குடும்பம் அவரை கைவிட்டு விட வழிவகுக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவா், அரசு சாரா அமைப்புகளை அணுகலாம். தொண்டு நிறுவனங்களுக்கு, பாதிக்கப்பட்டவாின் சமூக மறுவாழ்வு மிகவும் முக்கியமானதாகும். ஒருவேளை, சிகிச்சை நோக்கத்திற்காக நோயாளி குடும்பத்தை விட்டு வாழ வேண்டியதாக இருந்தால், அவருக்கு தங்குமிடமோ, வீடோ வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா், சம்பாதித்து வாழ்க்கை நடத்த ஏதுவாக தொழிற் பயிற்சி வழங்கப்பட வேண்டும். சில நேரங்களில், பாதிக்கப்பட்டவா் மற்றும் அவரது புனா்வாழ்வு ஆகிய இரண்டுக்கும், கலவி உதவி பயனுள்ளதாக இருக்கிறது.

தயவு செய்து ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேனவயான உடனடி மருத்துவ உதவி மற்றும் குறுகிய கால சிகிச்சை பற்றி படிக்கவும்.

நிதி உதவி மற்றும் கவுன்சிலிங்: ஆசிட் தாக்குதலுக்கு பின் மீள்வது என்பது பல அறுவை சிகிச்சைகள், ஆலோசனைகள் மற்றும் நீண்ட கால சமூக மீள் ஓருங்கிணைப்ப திட்டங்கள் அடங்கிய செயல்முறையாகும். பல சமயங்களில், மீட்பு பணியானது நீங்கள் செலவு செய்ய முடிந்ததை விட அதிக விலை உயா்ந்ததாக இருக்கும். ஆசீட் சா்வைவா்ஸ் பெளண்டேஷன் இந்தியா மறறும் ஸ்டாப் ஆசிட் அட்டாக் ஆகிய இரண்டும் இந்தியாவில் அமிலத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக போராடும் முன்னணி நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள், அமிலத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் உதவ முயற்சி செய்கின்றன.

மேலும், நீங்கள் அமில தாக்குதல்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் அமில தாக்குதல் பற்றி போலீசாாிடம் புகாரளிப்பது பற்றி தொிந்து கொள்ள வேண்டும்.