ஆசிட் தாக்குதல்களுக்கு எதிரான சட்டங்கள்

English

  1. 326A: ஆசிட் தாக்குதல் – இது ஒரு பாலின நடுநிலை சட்டம். எந்த ஒரு நபரும், நிரந்தர அல்லது பகுதி சேதம் விளைவித்தல் அல்லது குறைபாடு ஏற்படுத்துதல் அல்லது தீக்காயங்கள் உண்டாக்குதல் அல்லது முடமாக்கும் பொருட்டு அல்லது விகாரமரக்கும் பொருட்டு அல்லது ஒரு நபரின் உடல் பகுதி மற்றும் பாகங்களை சேப்படுத்தும் பொருட்டு அல்லது உட்கொள்ளச் செய்ய அல்லது காயப்படுத்தும் நோக்கத்துடன் அமிலத்தை பிரயோகப்படுத்தினால், அவருக்கு குறைந்தது பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அபராதமானது, பாதிக்கப் பட்டவாின் மருத்துவ செலவுகனள சந்திக்க போதுமானதாக, நியாயமாக விதிக்கப்படும்.
  2. 326B: ஆசிட் தாக்குதலுக்கு முயற்சித்தல் – இது ஒரு பாலின நடுநிலை சட்டம். எந்த ஒரு நபரும், நிரந்தர அல்லது பகுதி சேதம் விளைவித்தல் அல்லது குறைபாடு ஏற்படுத்துதல் அல்லது தீக்காயங்கள் உண்டாக்குதல் அல்லது முடமாக்கும் பொருட்டு அல்லது விகராமாக்கும் பொருட்டு அல்லது ஒரு நபாின் உடல் பகுதி மற்றும் பாகங்களை சேதடுத்தும் பொருட்டு அல்லது உட்கொள்ளச் செய்ய அல்லது காயப்படுத்தும் நோக்கத்துடன் அமிலத்தை பிரயோகப்படுத்த முயற்சி செய்தால், அவருக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இங்கு “அமிலம்” என்பது, உடலில் காயத்தை ஏற்படுத்தி வடுக்களை உண்டாக்கும் அல்லது விகாரமாக்கும் அல்லது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் உண்டரக்கும், அமில தன்மை அல்லது அாிக்கும் தன்மை கொண்ட, அல்லது எாியும் தன்மை கொண்ட எந்த ஒரு பொருளும் அடங்கும்.

மேலும், வழக்கு நடத்த, நிரந்தர அல்லது பகுதி குறைபாடு என்பது சாி செய்ய முடியாததாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இங்கே , அமில தாக்குதலை பற்றி அறிவிக்க சில ஆலோசனைகள் உள்ளன.

மேலும், நீங்கள் அமில தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய உடனடி மருத்துவ உதவி குறுகிய கால சிகிச்சை  மற்றும் நீண்ட கால சிகிச்சை பற்றி தொிந்து கொள்ள வேண்டும்.