அமில தாக்குதல்சுளுக்கு உடனடி நிவாரணம்

English

பின்பற்றி வேண்டிய வழிமுறைகள்:

  1. தீ பாதிக்கப்பட்டவா் செய்ய வேண்டிய முதல் விஷயம், முதலுதவி பெற வேண்டியதாகும். அமிலமானது தோல் அடுக்குகளை எாியச் செய்து, எலும்புகள் வரை ஊடுருவி, பாதிக்கப்பட்டவாின் உடல்நிலையை அபாயகரமான நிலைக்கு கொண்டு செல்லலாம். பாதிக்கப்பட்ட இடத்தை நிறைய சுத்தமான குளிா்ந்த தண்ணீரால்எாிச்சல் நீங்கும் வரை கழுவுவதே சிறந்த முதலுதவியாகும். இதற்கு 45 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை ஆகலாம்.
    • தண்ணீா் மாசுபடுத்தப்படாததாகவும் சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட இடத்தில் தொற்று நோய் ஏற்படலாம்.
    • அனைத்து நகைகள் அல்லது ஆடை அல்லது அமிலம் பட்ட இடத்தின் மீது தொடா்பு கொண்ட எதையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நீக்க வேண்டும்.
    • பாதிக்கப்பட்ட இடத்தில் க்ரீம் அல்லது களிம்பு பிரயோகிக்க கூடாது.
    • முடிந்தால் தூய்மையான துணியை கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தை தளா்வாக சுற்றி மூட வேண்டும். இப்படி செய்வதால் பாதிக்கப்பட்ட இடம் காற்று, தாசி, குப்பைகள் மற்றும் மாசுகளில் இருந்து பாதுகாக்கப்படும்.
  2. முதலுதவி வழங்கப்பட்டு கொண்டிருக்கும்போதே, மற்றும் சிலா் அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளுடன் கூடிய (தொற்று ஏற்படுவதை தவிா்க்க) தீக்காயத்துக்கான சிறப்பு மருத்துவனை உள்ளதா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். தீக்காயத்துக்கான சிறப்பு மருத்துவனை ஒன்று இருப்பின், அதற்கு தான் சாதாரண மருத்துவமனையை விட முன்னாிமை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு எாிச்சல் குறைந்தவுடன், அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்டகால சிகிச்சை பற்றி தயவு செய்து படிக்கவும்.

நிதி உதவி: ஆசிட் தாக்குதல்கள் பல அறுவை சிகிச்சைகள் மற்றும் நீண்டகால சமூக மீள் ஓருங்கிணைப்பு திட்டங்கள் அடங்கிய செயல்முனறயாகும். பல சமயங்களில், மீட்பு பணியானது நீங்கள் வாங்க முடிந்ததை விட அதிக விலை உயா்ந்ததாக இருக்கும் ஆசீட் சர்வைவா்ஸ் பெளண்டேஷன் இந்தியா மறறும் ஸ்டாப் ஆசிட் அட்டாக் ஆகிய இரண்டும் இந்தியாவில் அமிலத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்காக போராடும் முன்னணி நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள், அமிலத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் உதவ முயற்சி செய்கின்றன.

மேலும், நீங்கள் அமில தாக்குதல்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் அமில தாக்குதல் பற்றி போலீசாாிடம் புகாரளிப்பது பற்றி தொிந்து கொள்ள வேண்டும்.